கல்லூரி விடுதியின் குளியலறையில் இறந்துகிடந்த மாணவி : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

381

ஆந்திரா….

ஆந்திரா மாநிலம், அரிமாகுலபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று கல்லூரிக்குச் சென்று விட்டு மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சக மாணவிகள் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லை. இதனால் விடுதி முழுவதும் தேடிப் பார்த்தபோதும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து விடுதியின் குளியல் அறைக்குச் சென்று பார்த்தபோது வெளிப்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்து. பின்னர் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது கழுத்தில் காயத்துடன் மாணவி அனிதா சடலமாகக் கிடந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவியின் மர்ம மரணம் குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.