கன்னியாகுமரி…

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சூரியகோடு முளங்குழியை சேர்ந்தவர் ஜான்சன் (40) பிளம்பராக பணியாற்றிவரும் இவருக்கு சந்தியா (34)என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 10 வருடங்களாகியும் குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், சந்தியா தனது கணவன் ஜான்சனுக்கு தெரியாமல் அழகன்பாறை அருகே தட்டான்விளையை சேர்ந்த வர்க்கீஸ் என்பவரது மகன் ஆன்றோ பிரபிளின் என்பவரை திருமணம் செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக 30லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

இதையடுத்து ஆன்றோ பிரப்ளின் நேற்று மாலையில் தனது தாயாருடன் சந்தியாவின் வீட்டுற்கு வந்து, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இதுகுறித்து கணவன் மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் உறவினர்கள் சந்தியாவின் போனிற்கு அழைத்தபோது போன் எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.