கழுத்தைச் சுற்றி இறுக்கிய பாம்புடன் இ றந்து கிடந்த பெண் : வீட்டில் 140 பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி!!

463

வீட்டில் 140 பாம்புகள்..

அமெரிக்காவில்வீட்டில் 140 பாம்புகள் கழுத்தைச் சுற்றி இறுக்கிய பாம்புடன் ஒரு பெண் இ றந்து கிடக்க, பொலிசார் அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, மேலும் 140 பாம்புகள் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

இண்டியானாவில் வாழ்ந்து வந்த Laura Hurst (36) என்ற பெண் தனது வீட்டில், சுயநினைவின்றி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது அவரது கழுத்தைச்சுற்றி 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்றும் இருந்துள்ளது. எனவே, அந்த பாம்பு கழுத்தை இறுக்கியதால் அந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று கருதும் பொலிசார், என்றாலும் உடற்கூறு ஆய்வுக்கு முன் எதையும் உறுதியாக கூறமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர் இறந்து கிடந்த வீட்டில் 140 பாம்புகளும் இருந்ததால் பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் Laura தனக்கென்று சொந்தமாக 20 பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.