கர்நாடக…

கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா பகுதியில் தொட்டபிதரகல்லு பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண் சாக்ஷியை , அருண் என்பவர் காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்த சாக்ஷிக்கு அந்த அருணை பிடிக்காததால் அவரின் காதலை ஏற்கவில்லை .ஆனால் அந்த அருண் தொடர்ந்து காதலிக்க சொல்லி அந்த பெண்ணை தொல்லை படுத்தியுள்ளார் .

இந்நிலையில் திடீரென்று அந்த சாக்ஷியின் மாமாவுக்கு சில நாட்களுக்கு முன்பு அருணின் நண்பர் ஒருவர் போன் செய்து ,அருண் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் ,

போலீஸ் விசாரணை செய்வதாகவும் ,அதனால் சாக்ஷி உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டுமென்றும் ,

அருணை திருமணம் செய்தால், இந்த வழக்கில் இருந்து சாக்ஷி விடுவிக்கப்படுவார் என்றும் கூறினார். இதை கேட்ட அந்த பெண்ணின் மாமா இந்த விஷயத்தை போன் செய்து சாக்ஷியிடம் சொன்னார் .

அதை கேட்டு போலீஸ் ஸ்டேஷன் போக பயந்த அந்த பெண் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

பின்னர் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணின் மாமா அந்த சாக்ஷி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .

போலீசார் விசாரணை செய்த போது இது அருண் அந்த பெண்ணை காதலிக்க வைக்க நடத்திய நாடகம் என்பதை கண்டுபிடித்து ,

அந்த அருணையும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் கைது செய்தனர் .