காதலியை கொ.ன்று புதைத்துவிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு!!

479

மைசூர்….

பல ஆண்டுகள் காதலித்த தனது காதலியை கொன்று புதைத்துவிட்டு, அதன் அருகிலேயே தானும் தூக்கிட்டு தொங்கிய காதலனால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மைசூர் மாவட்டத்தின் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுற்றூலா தளமான காவேரி நிசர்கதாமா பகுதியில் சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை 18ம் திகதி சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறினால் சித்த ராஜூ தன் காதலி சுமித்ராவை கொலை செய்து உடலை புதைத்து விட்டு, அதன் அருகில் நின்ற மரத்தின் கிளையில் தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு பிறகு அந்த பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்த சித்த ராஜூவின் சடலத்தை கண்டு, தலக்காடு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில், சமபவ இடத்திற்கு வந்த காவல்துறை உடல்களை கைப்பற்றி தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.