காதல் திருமணம் செய்த 3-ம் நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

1320

தென்காசி…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி.

இவரது மகள் கெளசல்யாவுக்கு அதேப்பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த 7-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற கார்த்திக் வீட்டிற்கு வந்த பார்க்கும்போது மின்விசிறியில் கௌசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் தனது மனைவி கெளசல்யாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கௌசல்யா உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.