காதல் யாரை விட்டது : ஒபாமாவின் மகளின் படங்கள்!!

1161

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியா லண்டனைச் சேர்ந்து ரோரி பார்ஹார்சன் என்பவரை காதலித்து வரும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இவர்களிருவரும் விளையாட்டு மைதானத்தில் முத்தமிட்டுக் கொண்ட புகைப்படம் முதன் முறையாக வெளியானது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்து வலம் வந்தனர். இந்தப் புகைப்படங்கள் குறித்து ஒபாமா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

மேலும் தனது மகள் தற்போது ‘டேட்டிங்’ செல்ல ஆரம்பித்து விட்டார் என நகைச்சுவையாக ஒருமுறை தெரிவித்தார். தற்போது லண்டனில் ரயில் நிலையத்தில் மாலியாவின் நெற்றியில் காதலன் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் மற்றொரு புகைப்படத்தில் சிகரெட் கையிலிருக்கும் புகைப்படங்களும் வெளியானது.

ஆனால், அந்த சிகரெட் தனது காதலனுடையது. தனது காதலன் சிகரெட் பிடிக்கையில் அதனை தனது கையில் வைத்திருந்த பின்னர் அதனை அவரிடம் திருப்பி கொடுத்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் மாலியா சிகரெட் பிடித்த புகைப்படங்கள் வெளியானது மட்டுமின்றி தந்தை ஒபாமாவும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு வெகுகாலம் அடிமையாக இருந்து அதிலிருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.