நடிகர் சிம்பு தற்போது மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பக்க பலமாக இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதை சிம்புவும் பெரிதாக கருதுகிறார். இதை அவர் டிவி நிகழ்ச்சிகளிலோ அல்லது பத்திரிக்கை பேட்டிகளிலோ வெளிப்படுத்தி விடுகிறார். அதோடு அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராகவும் இருக்கிறார்.
அதில் முழுமையான கருப்பு நிற உடையில் வந்திருந்தார். இதை பலரும் காலா படம் ரஜினி போல அவர் ஸ்டைலில் வந்திருக்கிறார் என கூறினார்கள்.
ஆனால் சிம்பு வந்ததன் நோக்கம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் திட்டத்தை எதிர்ப்பதற்காக தானாம். இதனால் அவரை பலரும் வாழ்த்தியிருக்கிறார்கள்.