கால்கள் செயலிழந்த தந்தை.. மனநிலை பாதித்த தாய் : மகளின் நிலை? நடிகர் சூரி செய்த நெகிழ்ச்சி செயல்!

842

நடிகர் சூரி

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபடும் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை நடிகர் விஷால் நடத்தி வருகிறார். இதில் கஷ்டத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தை அழைத்து வந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்வர். இதற்கு விருந்தினராக சினிமா பிரபலங்களை அழைத்து வந்து அவர்கள் மூலம் பணமும் ஈட்டுவர்.

இதில் கடந்த வாரம் ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சியில் சிறுமி ஒருவர், கால்கள் செயலிழந்த அப்பா, மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவை 3ம் வகுப்பில் இருந்து பார்த்து வந்துள்ளார்.

40 அடி கிணற்றில் தவறி விழுந்த அப்பாவின் கால்கள் முற்றிலுமாக செயலிழந்துள்ளது, இதனை பார்த்த அவரது தாய் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இருவரையும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி தான் இரவு பகலாக பார்த்துக்கொண்டிருக்கிறாராம். சமையல், வீட்டுவேலை, தாய் தந்தையை கவனிப்பது என அனைத்தும் அந்த மகள் தான். 4 மணி நேரம் தான் தூக்கம்.

இதனை பார்த்த விஷால் அவர் தந்தையை சரிசெய்ய ஒரு இடத்தில் சேர்த்துவிட்டு. பின் அந்த குழந்தைகான அனைத்து படிப்பு செலவையும் ஒருவரை ஏற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். மேலும் குடும்ப செலவிற்கான பணத்தை நடிகர் சூரி சர்வராக வேலை பார்த்து அதில் கிடைத்த சம்பளத்தை அந்த பெண்ணிற்கு கொடுத்துள்ளார்.