ராஜஸ்தானை….
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ராகுல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். அவர் சிறையில் இருப்பதால் அவரது மனைவி கணவர் ராகுலுக்கு பரோல் வழங்கக்கோரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
தனது பரம்பரைக்கு வாரிசு வேண்டும் என்பதனாலும், தனக்கு குழந்தை தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ள அவர்,சிறையிலுள்ள தனது கணவரை 15 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 15 நாட்கள் ராகுலுக்கு பரோல் வழங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தலா 1 லட்சம் மதிப்பிலான இரண்டு ஜாமீன் பத்திரங்களையும், 2 லட்சத்துக்கான தனிப்பட்ட ஜாமினும் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.