சோனு சூட்….

தமிழ்,தெலுங்கு ,ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் சோனு சூட்.இவர் கொரோனா நோய்தொற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களுக்கு பல்வேறு விதமான முக்கியமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்ததால் பேருந்து வசதி கொடுத்தது.

ரஷ்யாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தனது தாயகத்திற்கு திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தது. விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது. ஏழை மாணவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுத்தது போன்ற பல உதவிகளைச் அவர் செய்துள்ளார் .

இத்தகைய மனிதநேயமிக்க உதவிகளை செய்துவந்த அவருக்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

சோனு சூட் தனது பெயரிலும், தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகள் என மொத்தம் எட்டு சொத்துக்களை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சோனு சூட்டின் இத்தகைய செயலுக்கு அவரது இரசிகர்கள் மற்றும் வலைதளவாசிகள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.