
இந்தியாவில் சகோதரி திருமணத்துக்காக தனது உ டல் உறுப்புகளை விற்க அனுமதி தர வேண்டும் என இளைஞர் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாவாஜி (24) என்ற இளைஞர், ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமிற்கு சில தினங்களுக்கு முன்னர் வந்தார்.
பின்னர் அங்கிருந்த துணை ஆட்சியர் கீர்த்தியிடம் சென்ற பாவாஜி, தனது சகோதரி திருமணத்துக்காக தனது உ டல் உறுப்புகளை விற்க தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதை கேட்ட கீர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இது குறித்து பாவாஜியின் பெற்றோருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
அதாவது, பத்து வயதிலிருந்தே சூ தாட்டத்துக்கு அடிமையான பாவாஜி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதை வைத்து தனது மூத்த சகோதரிக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார்.
ஆனால் தற்போது அனைத்து பணத்தையும் சூ தாட்டத்தில் இழந்த பாவாஜி இரண்டாவது சகோதரி திருமணத்துக்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய நினைத்தது தெரியவந்தது.
பின்னர் மீண்டும் துணை ஆட்சியர் கீர்த்தியிடம் பேசிய பாவாஜி, என் வாழ்க்கையை நான் வெறுத்துவிட்டேன், பலரை சூ தாட்டத்தில் ஏமாற்றி பணம் சம்பாதித்தேன், தற்போது என் வாழ்க்கையின் முழுமையான அர்த்தத்தை உணர உ டல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தேன்.
அதற்கு ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி தரப்படவில்லை, ஆனாலும் வேறு அரசு துறை அதிகாரிகளை சந்தித்து இதற்கு அனுமதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என கூறியுள்ளார்.