கணவன் எடுத்த விபரீத முடிவு

புதுடெல்லியில் மனைவி சந்தேகப்பட்டதால் அவமானம் தாங்காமல் அவருடைய கணவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்த சனித்குமார் (34), தனியார் நிறுவனத்தில் மென்பொருள் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வீட்டில் பணிபுரிந்து வரும் பணிப்பெண்ணிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவருடைய மனைவி அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருமுறை பொதுவெளியில் வைத்து சனித்குமாரின் மனைவி அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சனித்குமார், நேற்று இரவு திடீரென தூக்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சனித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சனித்குமார் எழுதிவைத்த கடிதத்தை பொலிஸார் கண்டறிந்தனர்.

அதில், “நான் இந்த முடிவை எடுத்தற்கு என் மனைவியே காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.