சந்தேகம், பணம், கனவால் சா கிறேன் அம்மா : த ற்கொ லை செய்து கொண்ட மாணவியின் வீட்டில் சிக்கிய கண்ணீர் கடிதம்!!

1039

சிக்கிய கண்ணீர் கடிதம்

தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல், தோல்வியடைந்த மாணவி த ற்கொ லை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

நெல்லை ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகளும், இரண்டாவது மனைவி இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இரண்டாவது மனைவியின் மூத்த மகள் படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக அவர் பத்தாம் வகுப்பில் 460 மதிப்பெண் எடுத்தார். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பில் அவரால் அந்தளவிற்கு அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை.

இதன் காரணமாக அவர் நீட் பயிற்சி தேர்வுக்காக வீட்டில் Tution செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் வீட்டில் அந்தளவிற்கு வசதியில்லாததால், அவரை பெற்றோர் அனுப்பவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்தபடியே படித்து வந்த அவர், நீட் தேர்வில் 90 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தார்.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த அவர், நீட் தேர்வினால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ க்கு போட்டு த ற்கொ லை செய்துகொண்டார்.
இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் மாணவியின் உ டலை மீட்டு பி ரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மாணவி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், நான் தான் த ற்கொ லைக்கு காரணம், என்னுடைய ம ரணத்திற்கு வேறு யாரும் காரணமில்லை, நான் ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லை, நான் மட்டும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தால், இப்போ கல்லூரிக்கு சென்றிருப்பேன்.

என்னால் வீட்டில் ஒரு வேலைக்காரி மாதிரி இருக்க முடியவில்லை,இப்போ கூட நீங்கள் நான் இ றந்துவிட்டேன் என்று கவலைப்படமாட்டீர்கள், கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்திவிட்டு சென்றுவிட்டாள் என்றே தான் நினைப்பீர்கள்.


ச ந்தேகப்பட்டு வீட்டின் உள்ளேயே அடைத்து வைத்தால் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? பணம் தான் என்னுடைய ஆசையை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளிவிட்டது, தங்கை தர்ஷினியை நன்றாக படிக்க வையுங்கள், வாழ்க்கையையே வெறுத்து போய் தான் இந்த முடிவை எடுக்கிறேன், ஐ லவ் யூ அம்மா என்று முடித்துள்ளார்.