சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி பூலான்தேவி! ஒரு கோடி சலூட் போடலாம்

1403

மறைந்தும் மறையாத மங்கா புகழ் கொண்ட வரலாறு படைத்தவர்கள் இன்றும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.அவ்வாறு காலங்கள் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று நாயகி பூலான்தேவியின் நினைவு தினம் இன்று.

தனது 12 வயதில் பல மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்டவர். பூலான்தேவி, தொடர்ச்சியாக சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரன் மான்சின்க் தொட்டு பல வல்லூறுகளால் கற்பு சூறையாடப்பட்டு கேட்போர் யாருமில்லாத நிலையில் அவனவன் குதிரையில் வந்து கடத்திச் சென்று சீரழித்து விட்டு சம்பல் பள்ளத்தாக்கில் வீசி விட்டு செல்வார்கள்.

மிகவும் வறிய குடும்பத்தில் மிகவும் தாழ்த்தபட்ட பழங்குடி இனத்தில் பிறந்தவர். ஏன் என்று கேட்க யாருமில்லாத ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.பின்னர் வல்லூறுகளை பழிவாங்கும் நோக்கில் சம்பல் பள்ளத்தாக்கில் ஒரு கொள்ளையனை திருமணம் செய்து அவன் மூலமாக துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று தானும் ஒரு கொள்ளைக்காரியாக மாறி தன்னை சீரழித்த அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளி பழி தீர்த்தார் இந்த வீர மங்கை பூலான்தேவி.

ஒரே நாளில் தன்னை சீரழித்த உயர் ஜாதி இந்துக்களை 13 பேரை சுட்டுத் தள்ளினார் இவர்.அதன் பின்னர் வட இந்தியா சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு பிரபல உலகம் வியக்கும் கொள்ளைக்காரியாக மாறினார். பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பார்.

பூலான்தேவி கொள்ளைக்காரியாக இருக்கும் போது சம்பல் பள்ளத்தாக்கு மாவட்டம் முழுவதிலும் பெண்களுக்கு என ஒரு பாதுகாப்பு இருந்துள்ளது.பூலான்தேவியை உயிரோடு அல்லது பிணமாக கொண்டு வருமாறு பொலிஸ் வீதி எங்கும் நோட்டிஸ் ஒட்டி விட்டது, ஆனால் எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் பூலான்தேவியை தேடி சம்பல் பள்ளத்தாக்கு சென்றதில்லை. அப்படி சென்றால் யாரும் உயிரோடு திரும்பி வரமுடியாது.

பின்னர் அரசின் பொதுமன்னிப்பு திட்டத்தின் மூலம் சரணடைந்தார். 10 வருட சிறை வாசத்தின் பின்னர் அரசியலில் குதித்தார்.தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் மூலமாக MP யானார். இந்த வீரமங்கை MP யாக இருக்கும் போது திட்டமிட்டு சதி மூலம் அவரது MP க்கான அபார்ட்மெண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பூலான்தேவி பற்றிய புத்தகம் ஒன்றும் உள்ளது, மேலும் BANDIT QUEEN என்ற பூலான்தேவி பற்றிய முழு வரலாறு கொண்ட திரைப்படம் ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த வீரமங்கைக்கு ஒரு கோடி சலூட் போடலாம்…