
இந்தியாவின் டெல்லியில் ஓடும் காரில் 14 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை காலை 7 மணிக்கு 14 வயது சிறுமி ஒருவர் காலை கடன் கழிக்க தனியாக நடந்து சென்றார்.
அப்போது சிறுமி அருகில் கார் ஒன்று வந்த நிலையில் அதிலிருந்து மூன்று பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக உள்ளே ஏற்றினார்கள்.
பின்னர் காரை ஒருவர் ஓட்டிய நிலையில் மற்ற இருவர் சிறுமியை பலாத்காரம் செய்தார்கள்.
இதையடுத்து சிறுமியை கீழே விட்டு தப்பியோடினார்கள்.
சம்பவத்துக்கு பிறகு அழுதுகொண்டே வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிசிடம் புகார் கொடுத்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய அஜய்சிங் மற்றும் சுரேந்தரா சிங் ஆகிய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள அருண் என்ற இன்னொரு இளைஞரை பொலிசார் தேடி வருகிறார்கள்.