சிறுவனின் தலைக்குள் சென்ற அம்பு : X – Ray வை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்!!

543

இந்தியாவில் அம்பு சிறுவனின் தலைக்குள் 4 இன்ச் சென்ற நிலையில் ஸ்கேன் மற்றும் xray மூலம் அது இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்த மருத்துவர்கள் இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை பின்னர் அம்பை வெளியில் எடுத்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூரை சேர்ந்த 3 வயது சிறுவன் தலையை நோக்கி யாரோ அம்பு எய்தியுள்ளனர்.

பழங்குடியினர் அதிகம் வாழும் அப்பகுதியில் இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அம்பு வீசியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து வலியால் துடித்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அங்கு அம்பு சரியாக எத்தனை இன்ச் ஆழம் உள்ளே சென்றது மற்றும் எந்த பகுதியில் சென்றது என்பதை அறிய மருத்துவர்கள் ஸ்கேன் மற்றும் xray எடுத்தனர்.

அதில் தெரிந்த காட்சியை பார்த்து மருத்துவர்கள் சிறிது நிம்மதியடைந்தனர். காரணம், உடலின் முக்கிய உறுப்புகளை இயக்கும் பகுதியில் அம்பு படாமல் இருந்தது அதில் தெரிந்தது.

இதன் பின்னர் இரண்டு மணி நேர ஆப்ரேஷனுக்கு பின்னர் அம்பு வெளியில் எடுக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அதிர்ஷ்டவசமாக சிறுவனின் உயிரை பாதிக்காத பகுதியில் அம்பு சிக்கி கொண்டது எங்களுக்கு xrayவில் தெரிந்தது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறிது நேரத்திலேயே சிறுவனுக்கு சுயநினைவு திரும்பியது.

ஆனாலும் அவனின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.