சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் – டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்

1103

பிரபல தொலைக்காட்சியின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். அது ஜூனியர், சீனியர் என்று இருவிதமாக நடத்தப்படும். அந்த சீனியர் சூப்பர் சிங்கரின் 6வது சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு பெற்றுள்ளவர் மக்கள் இசை மன்னனான செந்தில்.

இவரும் இவரது மனைவி ராஜலட்சுமியும் பங்கேற்க வந்தது முதலில் சூப்பர் சிங்கர் இல்லையாம். விஜய்டிவியில் நாட்டுபுற நிகழ்ச்சி என்றே வந்துள்ளனர். பிறகு அது சூப்பர் சிங்கர் என்று தெரிந்தவுடன் இது நம்மளுக்கு செட்டாகாது என கடமைக்கு இரண்டு பாட்டை பாடி ஊருக்கு சென்றுவிட்டனர்.

நீங்கள் செலக்டாகிட்டிங்க என நிர்வாகம் அழைத்தும் அவர்கள் செல்லவில்லையாம்.பிறகு சில முறை அழைத்த பிறகே சென்றுள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவர் தற்போது சாம்பியன் மட்டுமில்லாமல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார்.