சூப்பர் மார்க்கெட்டில் திருடி வசமாக மாட்டிக் கொண்ட பெண் பொலிஸ் : வெளியான சிசிடிவி காட்சி!!

662

தமிழகத்தில் பெண் பொலிஸ் ஒருவர் சாக்லெட் திருடி மாட்டிக் கொண்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு பிற்பகல் நேரத்தில் பொருள் வாங்குவது போல் சென்ற பெண் காவலர், அங்கிருக்கும் பொருட்களை திருடி தன்னுடைய பேண்ட் பையில் வைக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து அந்த கடை ஊழியர்கள், பெண் காவலரை பிடித்து பொருட்களை பறிமுதல் செய்து எழுது வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் காவல், தன் கணவர் மற்றும் ஆட்களை அழைத்து வந்து, அந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த மருத்துவ உரிமையாளர் பிரணாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் அந்த பெண் காவலர் திருடியது சாக்லெட் என்று கூறப்படுகிறது.