செந்தில் கணேஷை போல பிரபல சூப்பர் சிங்கர் 6 போட்டியாளருக்கு அடித்த லக்

805

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 6 என்ற பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. படு பிரமாண்டமாக நடந்த இந்த பாடல் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமான் உட்பட பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெறுவோருக்கு ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடுவதற்கான ஒரு வாய்ப்பு என்பது நம் அனைவருக்கும் தெரியும். 6வது சீசனின் வெற்றியாளரான மக்கள் இசை நாயகன் செந்தில் கணேஷ் இப்போது டி.இமான் இசையில் பாடல்கள் பாடி வருகிறார்.

அவரை தொடர்ந்து டி.இமான் மற்றொரு போட்டியாளருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதாவது செத்த ஜோக் ஸ்ரீகாந்திற்கு தான் அந்த வாய்ப்பு. இந்த தகவலை டி.இமான் அவர்களே இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.