மகாராஷ்டிரா….
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை மனவா நாயக். இவர் நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்ல வாடகை காரை புக் செய்தார்.
பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து கார் புறப்பட்ட நிலையில், கார் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே காரை ஓட்டியுள்ளார். இதைப் பார்த்த நடிகை டிரைவரிடம் செல்போன் பேசுவதை நிறுத்துமாறு கேட்டுள்ளார்.
இதனால், கோபமடைந்த அந்த டிரைவர், காரை வேகமாக இயக்கி நடிகைக்கு மரண பயத்தை காட்டினார். எங்கும் நிறுத்தாமல் சென்றதால் பயந்து போன நடிகை மனவா உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செல்போனில் அழைத்து புகார் தெரிவித்தார்.
ஆனால், அந்த டிரைவர் மனவா நாயக் செல்லும் இடத்திற்கு போகாமல் பாதையை மாற்றி வேகமாக சென்றார்.
பின்னர், காரில் இருந்த நடிகை சத்தம் போட்டு கூச்சலிட, காரை பின்தொடர்ந்து வந்த போக்குவரத்து போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர். காரை இடைமறித்து டிரைவரை கைது செய்தனர்.