செல்ல நாய் பெயரில் 9 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்த நபர்: அவர் சொன்ன காரணம்!

274

இந்தியாவின்…

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், பெற்ற பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுக்க விரும்பாமல் 9 ஏக்கர் நிலத்தை வளர்ப்பு நாய்க்கு எழுதி வைத்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பதிபாபா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண் வர்மா.

இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்த எதையும் கொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை.

நாராயண் வர்மாவுக்கு 18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவருடைய மனைவிக்கும், அவர் வளர்த்து நாய்க்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க விரும்பினார்.

அவருடைய விருப்பம்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எழுதிவைத்துள்ளார். அந்த நாயை சாகும்வரை பராமரிப்பவர்களுக்கு 9 ஏக்கர் நிலம் செல்லும்.

இது தொடர்பாக பேசிய நாராயண் வர்மா, நான் எனது பிள்ளைகளை நம்பவில்லை. அதனால் என்னுடைய மரணத்திற்கு பின் மனைவிக்கும், வளர்ப்பு நாய்க்கும் சொத்து கிடைக்கும் வகையில் எழுதி வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.