கரடி……
நீச்சல் குளத்தின் அருகில் தூங்கி கொண்டிருந்தவரை கரடி ஒன்று தட்டி எழுப்பி விடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில், மாசாசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த மேத்யூ பேட் என்பவர் வனப்பகுதியை ஒட்டிய விடுதியில் தங்கியிருந்தார்.
அப்போது, நீச்சல் குளத்தில் அருகே உள்ள சாய்வு நாற்காலியில் அவர் உறங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கரடி ஒன்று நீச்சல் குளத்தில் நீர் அருந்தியது.
அதன் பின்னர், மேத்யூ தூங்குவதைப் பார்த்து, அவரின் காலை தட்டி விட்டு எழுப்பியது. அப்போது பயத்தில் அலறிய மேத்யூவைக் கண்டு கரடி பயந்து ஓடியது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி பதிவாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.