
அமெரிக்காவில் வசிக்கும் 25 வயது இளம்பெண், குழந்தை போல டயபர் அணிந்து கொண்டும், தொட்டிலில் தூங்கி கொண்டும் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் பெண் பைஜி மில்லர் தனது வாழ்க்கையை முழுநேரமும் குழந்தைகளை போல் வாழ்ந்து வருகின்றார்.

குழந்தைகளை போல டயப்பருடன் தூங்குவது, விளையாடுவது என நாள் முழுவதும் குழந்தைகளை போல டயப்பர் அணிந்துகொண்டு தனது வேலைகளை செய்கின்றார். இதோடு தனது வீடு முழுவதையும் பொம்மைகளை வாங்கி வைத்து அதனோடு விளையாடி வருகின்றார் பைஜி.

இந்த இளம்பெண் தனது வாழ்க்கை முறையை பராமரிப்பதற்காக மாதத்திற்கு சுமார் 250 டொலர்கள் வரை செலவிடுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

பைஜி கடந்த மே 2018 முதல் இந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வருகிறார். இது குறித்து பேசிய பைஜி, நான் ஒரு குழந்தையைப் போல உடை அணியலாம்.
நான் யாருக்காகவும் எனது வாழ்க்கையை மாற்றி கொள்ளமாட்டேன். என் விருப்பப்படி வாழுவேன் என கூறினார். பைஜியின் நண்பர்கள், உறவினர்கள் இவரின் இந்த செயலை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நான் பொது இடங்களில் இவ்விதம் நடந்து கொள்வதில்லை. வீட்டில் மட்டும் குழந்தை தன்மையுடன் இருப்பதாக பேஜ் குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவரது துணையும் இதற்கு எவ்வித தடையும் தெரிவிக்கவில்லை.

பைஜிக்கு திருமணம் நிச்சயிக்க பட்டவர் இது போன்ற செயல் பாடுகளில் ஈடுபடுவதில்லை எனவும் பைஜியின் செயல்பாடுகளில் அவரால் இடர்பாடுகள் ஏதும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.