இந்தியாவில் அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்த முதுகலை பட்டம் பெற்ற இளம்பெண் அவரது குடும்பத்தாரோடு சேர்ந்து தனது தந்தையை கொன்று வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளார்.
அந்த இளம் பெண் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது அவரின் தந்தையே அவரை பலாத்காரம் செய்ய முயன்றதால் தற்காப்பிற்காக இந்தக் கொலையை செய்ததாக ஒப்பு கொண்டிருக்கிறார்.
பலாத்காரம் செய்ய முயன்ற போது தான் தடுத்ததால் தந்தை கோடாரியால் வெட்ட வந்ததாகவும், தன்னை காப்பாற்றி கொள்ள அதே கோடாரியை பிடுங்கி அவரது தந்தையை அவரே கண்டம் துண்டமாக வெட்டி கொன்றதாகவும் கொலையை மறைக்க பிணத்தை கட்டிலில் போட்டு அதன் மேல் தான் படுத்து உறங்கியதாகவும் இவர் தெரிவித்த விவரம் காவல்துறையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மேலும் 70 வயது தந்தையின் கொலையை மறைப்பதற்காக உடலை வீட்டில் ஒரு அறையில் வைத்திருந்ததாகவும் துர்நாற்றம் வரவே 15 அடி குழி தோண்டி அவரது உடலை புதைத்ததாகவும் , ஆனால் அதனையும் மீறி தற்போது காவல்துறையிடம் மாட்டி கொண்டோம் என்றும் அந்த இளம்பெண் விசாரணையின் போது கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.