தமிழகத்தை உலுக்கிய சங்கர் படுகொலை வழக்கு கௌசல்யா யாழ்ப்பாணத்தில்!!

911

தமிழகத்தில் ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த கௌசல்யா, யாழ் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவர், கௌசல்யா என்ற வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்தினால், கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கௌசல்யாவை, பல பிரபலங்கள் பாராட்டினர். மேலும், பலருக்கு முன்மாதிரியாக கௌசல்யா திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கௌசல்யா யாழ் பல்கலைக்கழத்திற்கு சென்றுள்ளார். அங்கு மாணவர்கள் சிலருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ஆனால், அவரின் வருகை குறித்த காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.