தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம் : தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி!!

627

விழுந்து நொறுங்கிய போர் விமானம்

இந்தியாவில் போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து ஜாக்குவார் விமானம் பயிற்சிக்காக இன்று காலை புறப்பட்டது.

அப்போது குஷி நகரில் திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் தீப்பிடித்தது. அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்த விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் பொலிசார் விரைந்துள்ளனர்.

இந்நிலையில், ராணுவ நீதிமன்றம் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.