தாலிக்கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை.. தரையில் உட்கார்ந்து அழுத மணப்பெண்.. இறுதியில் நடந்தது என்ன?

1660

மணப்பெண்

இந்தியாவில் தாலிக்கட்டும் நேரத்தில் மணமகன் வரதட்சணையை காரணம் காட்டி திருமண மண்டபத்திலிருந்து வெளியேறிய நிலையில் அடுத்த நாள் அதே மணமகளை திருமணம் செய்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரை சேர்ந்தவர் மேக்ராஜ் லோதா. இவருக்கும் மோனா குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை திருமணம் நடக்கவிருந்தது.

அதன்படி வெள்ளிக்கிழமை மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் தாலிக்கட்டும் நேரத்தில் மோனாவின் தந்தையிடம் தனக்கு புது பைக் வேண்டும் என மேக்ராஜ் கேட்டார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே மேக்ராஜ் மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் மோனா கண்ணீர் விட்டு தரையில் உட்கார்ந்து அழுதார். பின்னர் மோனா மற்றும் அவர் தந்தை காவல் நிலையத்துக்கு சென்று இது குறித்து புகார் கொடுத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிசார் மேக்ராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று திடீரென மோனா வீட்டுக்கு தனது தந்தையுடன் வந்த மேக்ராஜ் மணப்பெண் மற்றும் அவர் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் திருமணத்துக்கு இரு குடும்பத்தாரும் சம்மதித்த நிலையில் விடுப்பட்ட திருமண சடங்குகள் மீண்டும் தொடங்கப்பட்டு திருமணம் நடந்தது.