தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் தொடங்கிய போது ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. அதன் காரணமாகவே நிகழ்ச்சி மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதையும் தாண்டி அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.
ஓவியா போன்றோர் பிரபலமும் அடைந்தனர், ஜுலி போன்றவர்கள் மக்களின் வெறுப்புக்கும் ஆளாகினர். இப்போது பிக்பாஸ் 2 சீசன் போட்டியாளர் ஐஸ்வர்யா மற்றும் ஜுலி வைத்து ஒரு மீம்ஸ் வந்துள்ளது.
அதில் ஐஸ்வர்யா, ஜுலியை விட மிகவும் மோசமானவர். ஜுலி எங்களை மன்னித்து விடு, உன்னை விட மோசமானவர்கள் இல்லை என்று நினைத்தோம், ஆனால் அது தப்பு என்று பதிவு செய்துள்ளனர்.