திருமணத்திற்கு பின் ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியம் : 21 ஆண்டுகளாக காப்பாற்றி வரும் நடிகர் அஜித்!!

1242

ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியம்..

பிரபல திரைப்பட நடிகரான அஜித், தன்னுடைய மனைவி ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை 21 ஆண்டுகளாக பின்பற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதிலும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் திரையுலகில் காதல் திருமணத்திற்கு தலை சிறந்த உதாரணமாக இருக்கும் ஜோடிகளில் நடிகர் அஜித்-ஷாலினி இருக்கின்றனர்.

கடந்த 1999ம் ஆண்டு சரண் இயக்கத்தில் உருவாகி வந்த அமர்க்களம் படம் மூலம் இருவரும் அறிமுகமாகிக் கொண்டனர்.

அதன் பின் அந்த படத்திற்கான படப்பிடிப்பின் போது, ஷாலினிக்கு திடீரென்று காயம் ஏற்பட்டுவிட்டதால், அஜித் உடனே பல மருத்துவர்களை படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்துவிட்டார்.

ஏனெனில் அப்போது அஜித் சிறந்த பைக் ரேஸராக இருந்ததால், அவருக்கு மருத்துவர்கள் பலர் தெரிந்திருந்தனர். இதனால் தனக்கு தெரிந்த மருத்துவர்கள் அனைவரையும் அவர் அங்கு வர வைத்துவிட்டார்.

படப்பிடிப்பு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநிவாசா தியேட்டரில் நடந்து கொண்டிருந்ததால், இந்த விஷயம் எப்படியோ அப்பகுதி முழுக்கப் பரவிவிட்டது.

இந்த கருணையை பார்த்து தான் காதலை ஷாலினி உறுதி செய்ததாக பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார். இதை இயக்குநர் சரணே பலமுறை உறுதி செய்துள்ளார்.

திரையில் மட்டுமே காதல் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், இது அப்போது ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது, காதலில் விழுந்த அடுத்த ஆண்டே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அன்று முதல் இன்று வரை இந்த ஜோடி திரை வட்டாரத்தையே தங்களின் வாழ்க்கை முறையால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

இந்த ஜோடி காதல் வாழ்வில் 21 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில், அஜித், ஷாலினிக்கு செய்து கொடுத்த சத்தியம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆண்டில், ஒரு படத்திற்கு மேல் கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்றும் ஒரு மாதத்தில் குறைந்தது 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பேன் என்றும் அவர் தன் மனைவியிடம் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

ஏனெனில் குழந்தைகள் உடனும் மனைவியுடனுமே அதிக நேரங்களை அஜித் செலவழிக்க வேண்டும் என்பது ஷாலினியின் விருப்பமாக இருந்துள்ளது.

அதனை அவர் தக்க தருணத்தில் கூறவே, வீட்டையும் மனைவியையும் அதிகம் நேசிக்கும் அஜித், அதற்கு உடனே சம்மதமும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தான், படப்பிடிப்புக்கு வரும்போது கூட சில நேரங்களில் மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து கொண்டே வர ஆரம்பித்துள்ளார்.

சத்தியம் செய்வது எளிது, ஆனால் அதை பின்பற்றுவது மிகவும் கடினம், ஆனால் அஜித் சத்தியம் செய்து கொடுத்து இத்தனை ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார் என்றால், இதை அவருடைய ரசிகர்களும் தங்கள் வாழ்க்கையில், குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.