திருமணத்திற்கு முன்னர் கர்ப்பம்… மனம் மாறிய காதலன் : இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!

684

இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்

சென்னை போரூரில் கடந்த மாதம் 11 ஆம் திகதி பச்சிளம் குழந்தையை துணிப்பையில் வைத்து சுடுகாட்டிற்கு அருகில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை ஒன்று துணிப்பையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பச்சிளம் குழந்தையை மீட்டு போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அந்தக் குழந்தை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதுடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது, இளம் பெண் ஒருவர் குழந்தையை துணிப்பையில் வைத்து வீசிசென்றது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை வீசிச்சென்ற அந்தப் பெண்ணை பொலிசார் தீவிரமாக தேடி வந்தனர்.

டெய்சி லாவண்யா என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகியதில் நான் கர்ப்பமடைந்தேன்.

இந்நிலையில், என்னுடைய தாயும் உடல்நலக்குறைவால் இறந்து விட, நிச்சயிக்கப்பட்ட நபரும் கைவிட்டுச் சென்றார், இதனால் பெற்ற குழந்தையை வளர்க்க முடியாமல், வீசி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அவரை மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் பொலிசார் சேர்த்துள்ளனர்.