திருமணமான ஆறு நாட்களில் புதுப்பெண்ணுக்கு நடந்த துயரம் : அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

1400

தமிழகத்தில்..

தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் திடீரென மயங்கி விழுந்து புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சந்தியா. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடந்தது. அதன் பின்னர் புதுமணத் தம்பதி திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் திகதி கணவர் முருகனுடன் சந்தியா விருந்துக்கு சென்றுள்ளார். அங்கு புதுப்பெண் சந்தியா உடைமாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சந்தியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்புதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மனைவி சந்தியாவின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் புதுமாப்பிள்ளை முருகன் சோகத்தில் தவித்துள்ளார்.

தனது வீட்டுக்கு செல்வதாக கூறி குந்தலம்பட்டி கிராமத்திற்கு சென்ற அவர், வயல்வெளி பம்புசெட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. திருமணமான ஆறு நாட்களில் புதுப்பெண் உயிரிழந்ததும், அவரை இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் கணவர் தற்கொலை செய்துகொண்டதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.