திருமணமான 11 நாட்களில் உயிரை விட்ட புதுப்பெண் : அவர் கையில் எழுதியிருந்த அந்த வார்த்தைகள்!!

1151

உயிரை விட்ட புதுப்பெண்

இந்தியாவில் திருமணமான 11 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தவனகிரி நகரை சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கும் ஷில்பா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 11 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று புதுப்பெண் ஷில்பா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஷில்பாவின் சடலத்தை மீட்டனர். ஆப்போது அவர் கை மணிக்கட்டில் 4 பேரின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தான் தனது சாவுக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது.

மஞ்சுவும், ஷில்பாவும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையியே திருமணம் செய்து கொண்டனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.