திருமண விழாவிற்கு சென்ற சிறுமியை கடத்தி கட்டாயப்படுத்தி மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டம் பகிச்சா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி இவர் கடந்த 4ம் திகதி அன்று திருமண் விழா ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது சாப்பிட்டு கைகழுவும் இடத்தில் சிறுமியை இருவர் கடத்தி சென்றுள்ளனர்.
மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளனர். மயங்கிய நிலையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இந்நிலையில் சிறுமியை காணாதை அறிந்த பெற்றோர்கள் உறவினர்கள் தேடி நிலையில் சிறுமி மயங்கி நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி உண்மையை கூற பெற்றோர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி அடையாளம் காட்டிய தோலி மற்றும் ஃபக்கல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.