தூக்கில் சடலமாக தொங்கிய காதல் மனைவி : துடித்துப் போன கணவர் எடுத்த விபரீத முடிவு!!

895

புதுச்சேரியில் காதல் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காத கணவன் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த பொன்னரசன் – நிவேதா தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பொன்னரசனுடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 5 நாட்களுக்கு முன் நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மனைவி இறந்ததால் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற பொன்னரசன் உறவினர்களால் கப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில், துக்கம் தாங்காமல் மது அருந்திய அவர் மதுபாட்டிலை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.