தூக்க மாத்திரை கொடுத்து கொல்ல முயன்ற மனைவி : அலறியடித்து ஓடிய கணவன்!!

491

அலறியடித்து ஓடிய கணவன்

தமிழகத்தில் கூலித்தொழிலாளியை கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவரது மனைவி பிரியா. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரியாவுக்கும், மல்லூர் பகுதியை சேர்ந்த கௌதம் ராஜூவுக்கும் தொடர்பு இருந்தது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், முருகேசனை கொலை செய்ய பிரியாவும், கௌதம் ராஜூவும் திட்டமிட்டனர்.

அதன்படி முருகேசனுக்கு தூக்க மாத்திரை கொடுத்த பிரியா கணவரை தாக்கியதோடு அவரை கொல்லவும் முயன்றார். எனினும், அங்கிருந்து பலத்த காயத்துடன் தப்பியோடிய முருகேசன் இது குறித்து பொலிஸ் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் பிரியா மற்றும் கெளதமை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த கத்தி, கையுறை மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள்.