மனைவியை கொலை

தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை கொலை செய்த பிரித்தானியருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லீவிஸ் பெணிட் என்பவர் கப்பல் மாலுமியாக இருந்த நிலையில், இசபெல்லா ஹெல்மேன் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு முன்னரே இருவருக்கும் குழந்தை இருந்துள்ளது. இதையடுத்து புதுமண தம்பதி அமெரிக்காவுக்கு தேனிலவுக்கு சென்றுள்ளனர்.

அங்கு கப்பலில் சென்று கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே கப்பலை நீரில் மூழ்க செய்து மனைவியை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் லீவிஸ். இதையடுத்து பொலிசார் லீவிஸை கைது செய்தனர். விசாரணையில் லீவிஸ் விலைமதிப்புமிக்க நாணயங்களை கடத்தும் தொழிலை செய்து வந்தது தெரியவந்தது.

இதோடு தனது மனைவி இசபெல்லாவின் எஸ்டேட் மற்றும் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்ட லீவிஸ் அதற்காக அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

திருமணத்துக்கு முன்னர் வரை லீவிஸின் கடத்தல் தொழில் இசபெல்லாவுக்கு தெரியாமல் இருந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் தேனிலவின் போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இசபெல்லாவின் சடலத்தை கடலில் தேடியும் கிடைக்காத நிலையிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

நாணயங்களை கடத்தியது தொடர்பாக லீவிஸ் ஏற்கனவே 7 மாத சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மனைவியை கொன்ற வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி லீவிஸுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், $22,910 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.