நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் சீக்ரெட் டிப்ஸ்!!

717

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் சிக்கென்ற உடல்வாகு, கம்பீரமான தோற்றம் காட்டும் ஜென்டில் மேன். பல படங்களில் பொலிஸ் அதிகாரியாக, கம்பீரமான மனிதராக மட்டுமே நம் மனதில் பதிந்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.

இவர், உடம்பைப் பொறுத்த வரைக்கும் ஃப்ளெக்ஸிபிளிட்டி (Flexibility), ஸ்ட்ரெந்த் (Strength), எண்ட்யூரன்ஸ் (Endurance Exercise) ஆகிய மூன்று விடயத்தையும் கவனமாக பின்பற்றினால் தான் நம் உடலை ஃபிட்டா வைத்துக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

அதாவது, இந்த 3 விடயத்திற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் தேவைப்படும். உதாரணமாக, யோகா வகைப் பயிற்சிகள் செய்வதன் மூலமாக உடம்பிற்கு ஃப்ளெக்ஸிபிளிட்டி கிடைக்கும்.

வொர்க்அவுட்ஸ் செய்வதன் மூலம் தசைகளுக்கு வலிமை (Strength) கிடைக்கும்.

நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, ரன்னிங் போன்ற கார்டியோ போன்றவை ஹெல்த்துக்கு உதவும் பயிற்சிகள் அனைத்தும் எண்ட்யூரன்ஸ் வகையைச் சேர்ந்தவை.

கடைசி வகை, மனம் தொடர்பானது. அது தான் என்னோட பொறுமைக்குக் காரணம். இப்படியான வெவ்வேறு பயிற்சி முறைகளை என் வேலைக்கு இடையில், ஒருநாள் விட்டு ஒருநாள் நான் பண்ணுவாராம்.

ஒரு 3 மாதம் நீச்சல் பயிற்சி செய்தால், அடுத்த 3 மாதம் ட்ரெட்மில், அடுத்தடுத்த மாதங்களில் டான்ஸ், ஜூம்பான்னு (Zumba Dance) புதுசு புதுசா ட்ரை பண்ணி கத்துக்கிட்டு செய்வாராம்.

டயட், வொர்க்அவுட், ரெஸ்ட்னு இவை அனைத்தையும் ஒருசேர கவனித்துக் கொண்டால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்கிறார்.

தான் நிறையச் சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகவும், மூன்று வேளை உணவை 5- 6 முறை சாப்பிடுவதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல ஒரு பாதியில் அசிடிக் உணவும், மறுபாதியில் அல்கலைன் உணவும் இருக்கற மாதிரியும், காய்கறி, பழங்கள், சாதம், சப்பாத்தின்னு ஹெல்த்தியான உணவுகளை சாப்பிடுவதாகவும் கூறுகிறார்.

முக்கியமாக தினமும் உடற்பயிற்சி செய்தால் எந்த நோயும் அண்டாது என்கிறார்.