நடிகை நதியாவின் இளமை ரகசியம் இதுதானாம்!

735

தமிழ் திரைப்பட நடிகை நதியா தனது இளமை ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார்.நடிகை நதியா திரையுலகில் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை அதே இளமையுடனும், உற்சாகத்துடனும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இளமை ரகசியம் குறித்து அவர் கூறுகையில், ‘இது எனது பெற்றோரின் மரபணுவில் இருந்து வந்து இருக்கலாம்.

நான் எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிப்பவள். உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு, தூக்கம், எல்லோரையும் நேர்மையாக அணுகுவது இதுதான் காரணம். நேர்மையான எண்ணங்கள் நம்மை இளமையாக வைத்துக்கொள்ளும்’ என தெரிவித்துள்ளார்.