நடிகை ராஷ்மிகாவிற்கு ஏற்பட்ட விபத்து.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

109

ராஷ்மிகா..

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து பாலிவுட் படங்கள் வாய்ப்பும் வந்தது.

கடைசியாக இவர் நடித்திருந்த அனிமல் படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்துவிட்டாராம். மருத்துவர்கள் அறிவுரையின்படி இவர் வீட்டில் ஓய்வில் இருந்து தற்போது குணமாகி இருக்கிறாராம்.

அது பற்றி உருக்கமாக பதிவிட்டு இருக்கும் ராஷ்மிகா மந்தனா, ‘நாளைக்கு இருப்போமா என்று தெரியாது.. அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்’ என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.