டெல்லியில் அங்கித் என்ற 23 வயது இளைஞர் போட்டோகிராஃபர் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இஸ்லாமியப் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார்.
இதனைக் கண்டித்து அந்த பெண்ணின் குடும்பத்தார், அங்கித்தை அடிக்கடி எச்சரித்து வந்துள்ளனர். அதனைப் பொருட்படுத்தாமல் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனால், அந்தப்பெண்ணின் குடும்பத்தினர், அங்கித்தை, இரவு 9 மணியளவில் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் தாய், தந்தை மற்றும் தாய்மாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.