நாடு திரும்ப முடியாமல் யாசகம் எடுக்கும் இலங்கைப் பெண்கள்!!

391

இலங்கைப் பெண்கள்..

வெளிநாடுகளில் பணி புரிவோரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முற்போக்கு பெண்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும் பத்தரமுல்லயில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அதன் பிரதிநிதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

தற்போது நிலவும் கொவிட் தொற்று காரணமாக தங்கள் தொழில்களை இழந்து நாடு திரும்ப முடியாமல் குவைட் உட்பட ஏனைய நாடுகளில் வசிக்கும் பல இலங்கைப் பெண்கள்.

யாசகம் செய்கின்றதான காணொளிகள் சில நேற்றைய தினம் (07) ஊடகங்களில் வெளியிடப்பட்டன.