நித்யானந்தா கதற கதற கபளீகரம் செய்தார் என பரபரப்பு வீடியோ வெளியிட்ட சீடர் : உண்மையில் நடந்தது என்ன?

716

நித்யானந்தா

நித்யானந்தா மேல் சீடர் பரபரப்பு புகார் கூறியும் இதுவரை அவர் வாய் திறந்து அதற்கு பதிலளிக்காதது புதிராகவே உள்ளது. சாமியார் நித்யானந்தாவின் சீடர் ஒருவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் பேசிய அவர் நான் நித்யானந்தா சாமியால் 2014-ம் ஆண்டு மே மாதம் அனைவரின் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன், இதை சொல்ல எனக்கு இப்போதான் தைரியம் வந்தது என கூறினார். இதற்கு முன்னர் அந்த சீடர் வெளியிட்ட வீடியோவில் வைரமுத்துவை திட்டியும், நித்யானந்தாவை ஆதரித்தும் பேசியிருந்தார்.

நித்யானந்தா கபளீகரம் செய்ததாக சீடர் பேசிய வீடியோ கடந்த 4 தினங்களாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன.

கபளீகரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சீடரே எதற்காக வைரமுத்துவை திட்டியும், நித்யானந்தாவை ஆதரித்தும் வீடியோ வெளியிட வேண்டும்? அதேபோல, வைரமுத்துவை திட்டும் வீடியோவில் கடைசியாக நித்யானந்தம் என்று சொல்லி முடித்திருந்தார். அதேபோல நித்யானந்தத்தை குற்றஞ்சாட்டும் வீடியோவிலும் நித்யானந்தம் என்று சொல்லி முடிக்கிறார்.

மேலும் இதுவரை இந்த புகாருக்கு நித்யானந்தா எந்த பதிலும், மறுப்பும் சொல்லாதது ஏன் என்றும் தெரியவில்லை. எனவே இந்த வீடியோ பரபரப்புக்காக வெளியிடப்பட்டதா அல்லது பெண்களை போல ஆண்களும் நித்யானந்தாவிடம் உறவில் இருக்கிறார்கள் என்பதை விளம்பரப்படுத்த வெளியிடப்பட்டதா என தெரியவில்லை.