நிம்மதி போனது… பெற்ற மகனை கொலை செய்து எரித்த பெற்றோர் : பின்னணி தகவல்கள்!!

908

மது குடித்துவிட்டு துன்புறுத்தி வந்த மகனை கொன்று எரித்த வழக்கில் பெண் அதிகாரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் – சாந்தி தம்பதியினரின் மகன் சிலம்பரசன் (28). சாந்தி அரசு அதிகாரி ஆவார்.

மகன் சிலம்பரசன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

சிலம்பரசன் வேலைக்கும் செல்லாமல் தனது தாய் மற்றும் தந்தையுடன் ராஜபாளையத்தில் வசித்தார். பெற்றோரிடம் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து அவர்களை துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் பெற்றோர் நிம்மதி இழந்துள்ளனர். சிலம்பரசன் மது போதையில் அடுப்பில் அப்பளம் பொறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தந்தை ஏதோ கூற இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமுற்ற சிலம்பரசன் கொதிக்கும் எண்ணெய்யை முருகனின் காலில் ஊற்றியுள்ளார்.

இதுபோன்ற சிலம்பரசனின் மோசமான செயல்களை பெற்றோரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் மகனை கொலை செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

5.10.2016 அன்று ராமராஜுன் ஆட்டோவை வரச் சொல்லி, சிலம்பரசனுக்கு பெண் பார்க்கப் போவதாகக் கூறி அவரை சில பெண தரகர்களிடம் கூட்டிச் சென்று காட்டியுள்ளார்கள். பின்னர் வீடு திரும்பியதும் சிலம்பரசன் மிகுந்த மகிழ்ச்சியில் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.

அதன்படி, ஆட்டோ டிரைவர் ராமராஜுடம் பணம் கொடுத்து, மகன் சிலம்பரசனுக்கு அளவுக்கு அதிகமாக மயங்கும் அளவிற்கு மது வாங்கிக் கொடுக்குமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

அதன்படி மதுகுடித்து மயக்க நிலையில் வந்த சிலம்பரசனை முருகன், ராமராஜ், சாந்தி ஆகியோர் சேர்ந்து நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள்.

மூவரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாரதா, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.