புதுச்சேரியில்..
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியை சேர்ந்தவர் சந்துரு(25). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு செல்போனில் அடிக்கடி வாட்ஸ்அப் சாட்டிங் செய்யும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இரவு அமர்ந்துகொண்டு செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் சந்துரு வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரது தந்தை சேகர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சந்துருவை மீட்டு வில்லியனூர் அரசு பொது மருத்துவமனகை்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சேகர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சந்துருவின் நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர் பெண் என நினைத்து ஃபேக் ஐடியிடம் ஆபாச படம் அனுப்பி விளையாடியுள்ளார். ஆனால் விளையாட்டு வினையானது, அதை மர்ம நபர் ஒருவர் பதிவு செய்து, பணம் கொடுக்காவிட்டால் அதை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் மனவிரக்தியடைந்த சந்துரு தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக வாக்குமூலம் அளித்துவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதன் அடிப்படையில் அவரது தந்தை சேகர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன் மகனை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மர்ம நபரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.