நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவி முன்கூட்டியே கடிதம் எழுதிவைத்திருந்தது அம்பலம்!!

704

தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரதீபா 12ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். தற்போது நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது.இதனால் மருத்துவ படிப்பு படிக்க இயலவில்லையே என்ற கவலையால் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை.

இதனால் நீட் தேர்வை முழுவதுமாக நம்பியிருந்தார். இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன்னர் கடிதம் எழுதி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.

தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால் அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குமாறு பிரதீபா கடிதம் எழுதி வைத்துள்ளார். எனவே பிரதீபாவின் இறப்பிற்கு வினாத்தாள் குளறுபடியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.