நெஞ்சுப் பகுதியில் 22 வயது மாணவிக்கு ஏற்பட்ட வலி : பரிசோதனையில் காத்திருந்த அ திர்ச்சி!!

712

மாணவிக்கு..

பிரித்தானியாவை சேர்ந்த பெண் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு விமானத்தில் திரும்பிய பின் தனக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது என்பதை அறிந்து அ திர்ச்சியடைந்துள்ளார்.

22 வயது கல்லூரி மாணவியான Ellie Graham-க்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற Ellie-ஐ பரிசோதித்த மருத்துவர்கள் நீர்க்கட்டி பாதிப்பால் வலி ஏற்பட்டிருக்கலாம் என கூறினார்கள்.

ஆனாலும் Ellieக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட ப ரிசோதனைகள் செய்யப்பட்டது. Ellie ஏற்கனவே தனது காதலனுடன் ஸ்பெயினில் உள்ள Ibiza தீவுக்கு சுற்றுலா செல்ல டிக்கெட்கள் முன்பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து அங்கிருந்து ஊருக்கு திரும்பிய பின்னர் ப ரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள முடிவெடுத்து Ibiza-வுக்கு கிளம்பி சென்றார். அங்கு காதலனுடன் மகிழ்ச்சியாக நாட்களை கழித்த Ellie பின்னர் விமானத்தில் ஊருக்கு திரும்பினார்.

இதன்பின்னர் மருத்துவமனைக்கு சென்ற போது அவரின் ஸ்கேன் அறிக்கையை காட்டிய மருத்துவர்கள் Ellie-வுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக கூறினார்கள்.

இதை கேட்டு அவர் அ திர்ச்சியில் உறைந்தார். இதன்பின்னர் அறுவை சிகிச்சை மற்றும் radiotherapy சிகிச்சையை மேற்கொண்டு Ellie அதிலிருந்து மீண்டு வருகிறார்.

இது குறித்து Ellie கூறுகையில், மகிழ்ச்சியுடன் சுற்றுலா முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய எனக்கு ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் அ திர்ச்சியை கொடுத்தது. 22 வயதிலேயே மார்பக புற்றுநோய் ஏற்படும் என கனவிலும் நான் நினைக்கவில்லை.

அதே நேரத்தில் தொடக்கத்திலேயே நோயை கண்டுபிடித்துவிட்டதால் அது உடல் முழுவதும் பரவவில்லை என மருத்துவர்கள் கூறினார்கள். நான் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.