நோயாளி இறந்த விரக்தியில் பல் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

965

ஒடிசா மாநிலத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளி இறந்ததால், விரக்தி அடைந்த மருத்துவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் Bargarh பகுதியில் சிறிய பல் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருபவர் Subodh Sahu (40).

கடந்த சில நாட்களாகவே பல் வலியால் அவதிப்பட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த Labanga Sahu (35) என்ற பெண் சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு சிகிச்சை மேற்கொண்ட Subodh,வலி கொடுக்கும் பல்லை பிடிங்கிவிட்டால் சரியாகிவிடும் என கூறிவிட்டு இரண்டு ஊசிகளை போட்டுள்ளார். ஊசி போட்ட அடுத்த நிமிடங்களிலேயே அந்த பெண் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அந்த பெனின் கணவர் Saheba (40)-வை அழைத்து, மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு அவரது கணவரும் அந்த பெண்ணின் உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், Labanga ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மருத்துவர் Subodh, உடனடியாக, ஆபரேஷன் செய்யப் பயன்படும் கத்தியை கொண்டு தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்த அவரது வீட்டார் உடனடியாக மீது தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், Subodh தற்போது கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மருத்துவர் Subodh-ன் சான்றிதழ்களை சரிபார்க்கும்போது அவை அனைத்தும் போலியானவை என்பதை கண்டறிந்தனர்.

ஆனால் Subodh, தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக மருத்துவருக்கு மூன்று ஆண்டுகள் படித்திருந்தார் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இதுகுறித்து பொலிஸார் விரிவான விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.