நடிகை ஷகீலா……….
நடிகை ஷகீலா என்று சொன்னால் பலருக்கு அவரைப்பற்றிய அறிமுகமே தேவை இல்லை. அந்த அளவிற்கு அவரது புகழ் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பறந்து விரிந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் ஷகீலா பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.
இதையடுத்து, தற்போது ஷகீலா சினிமாவில் இருந்து சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். அதுவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்துகொள்கிறார்.
மேலும், முதல் போட்டியாளராக இவரை அறிமுகம் செய்திருக்கும் விஜய் டிவி, ஷகீலாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் சகீலாவைபார்க்கும் போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளார்.
எப்போதும், சற்று குண்டாக இருக்கும் இவர் உடல் எடை குறைத்து மிகுந்த அழகான தோற்றத்தில் குக் விக் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொள்கிறாராம்.
Contestant no 1 #Shakeela #CookWithComali – வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/uzsvrucBzr
— Vijay Television (@vijaytelevision) November 10, 2020