சென்னை….

சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன், தண்டையார்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சிறுவனை ஓட ஓட விரட்டி வெட்டியது.

இதில் படுகாயமடைந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் வந்தபோது மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார்,

சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்